TNPSC Thervupettagam

ஓரின நகல் சமநிலைப்படுத்தும் எதிர்ப் பொருள்

May 8 , 2020 1537 days 612 0
  • இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி மையமானது கோவிட் – 19க்கான எதிர்ப்புப் பொருளைப் பிரித்தெடுத்துள்ளது.
  • இந்த மையத்தினால் மேம்படுத்தப்பட்ட ஒரின நகல் சமநிலைப்படுத்தும் எதிர்ப் பொருளானது நோய் பாதிக்கப்பட்ட நபரில் கோவிட் – 19 வைரஸைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
  • குணமடைந்த ஒற்றைச் செல்லிலிருந்துப் பிரித்தெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்புப் பொருள் ஓரின நகல் எதிர்ப்பொருள் என்று அழைக்கப் படுகின்றது.
  • ஓரின நகல் எதிர்ப் பொருளிலிருந்து கோவிட் – 19 எதிர்ப் பொருள் பிரித்தெடுக்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இந்த எதிர்ப் பொருளானது மாற்று மருந்தாக இருக்கும் திறன் கொண்டது.
  • தற்பொழுது வரை, பிரித்தெடுக்கப்பட்ட நோய் எதிர்ப்புப் பொருள்கள் பலநகல் எதிர்ப்புப் பொருளாகும்.
  • பலநகல் எதிர்ப்புப் பொருள் என்பது குணமடைந்த பல்வேறு உயிரணுக்களிலிருந்து நோய் எதிர்ப்புப் பொருளைப் பிரித்தெடுப்பதாகும்.
  • நோய் எதிர்ப்புப் பொருள் என்பது மனித உடலில் நுழையும் அயல் சக்திகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில் மனித உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் புரதங்களாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்