இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உலக குத்துச்சண்டை அமைப்பின் (World Boxing Organization - WBO) ஓரியன்டல் மற்றும் ஆசிய-பசுபிக் இடை எடைப் பிரிவு (Oriental and Asia Pacific super middleweight) பட்டங்களை தக்க வைத்துக் கொண்டார்.
இதற்காக “ராயல் ரம்பில்” என்ற தலைப்பில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஆப்பிரிக்க நாட்டு குத்துச்சண்டை வீரரான எர்னஸ்ட் அமுசுவை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான விஜேந்தர் சிங் வீழ்த்தினார்.
இந்த வெற்றியானது தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் விஜேந்தர் சிங் பெறும் பத்தாவது தொடர் வெற்றியாகும்.