TNPSC Thervupettagam

ஓரியன் நெபுலாவில் வியாழன் கோள் அளவிலான விண்பொருட்கள்

November 23 , 2023 240 days 194 0
  • பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திர உருவாக்கப் பகுதியான ஓரியன் நெபுலாவில் (விண் முகில் படலம்) வியாழன் கோளின் அளவிலான, எந்தவித இணைப்புமின்றி மிதக்கும் விண்பொருட்களை ஐரோப்பிய விண்வெளி முகமையின் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இவை “வியாழன் கோளின் நிறையிலான இரும வடிவப் பொருள்கள்” அல்லது “ஜம்போஸ்” (பருத்தப் பொருட்கள்) என்று அழைக்கப்படுகின்றன.
  • அவை அதன் தோற்றுவாய் நட்சத்திரத்தைச் சுற்றிய பாதையில் காணப்படவில்லை என்பதால் நட்சத்திரங்கள் அல்லது கிரகங்களுக்கான பெரும்பாலான வழக்கமான வரையறைகளுக்குள் அவை பொருந்தாது.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது, தற்போதுள்ள நட்சத்திரம் மற்றும் கிரக உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கிறது.
  • நீராவி மற்றும் மீத்தேன் கொண்ட வளிமண்டலங்களுடன், இந்த ஜம்போக்கள் அவற்றின் கட்டமைப்பில் ஒரு கோள் போன்றப் பண்புகளைக் கொண்டுள்ளன.
  • அவற்றின் கட்டமைப்பு கோள்களை போல இருந்தாலும், அவை எந்தவித பிணைப்பும் இன்றி மிதக்கும் தன்மையால் ஒரு கோளாக தகுதி பெறவில்லை.
  • ஓரியன் நெபுலா பூமியிலிருந்து சுமார் 1,344 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்