ஓலா நிறுவனமானது தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு வரும் தனது மின்சார இருசக்கர வாகனத் தொழிற்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக பரோடா வங்கியுடன் 100 மில்லியன் மதிப்பிலான ஒரு 10 ஆண்டுகால கடன் வழங்குதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது இந்திய மின்சார வாகனத் தொழிற்துறையிலேயே மிகப்பெரிய நீண்டகால கடன் வழங்குதல் ஒப்பந்தம் ஆகும்.
இந்த மின்சார வாகனத் தொழிற்சாலையானது கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.