முதன்முறையாக, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக வண்ணத்துப் பூச்சிகள் பறப்பதை அறிவியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
அட்லாண்டிக் கடல்கடந்த வலசை நிகழ்வானது, மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானா வரை 2,600 மைல்களுக்கு மேல் மேற் கொள்ளப் படுகிறது.
அட்லாண்டிக் பெருங்கடல் வழியான, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட பூச்சி இடம்பெயர்வுகளில் ஒன்றை நிறைவு செய்ததன் மூலம் இந்த வண்ணத்துப்பூச்சி இனம் அந்தப் பகுதியினைச் சென்றடைந்தது.
ஓவிய அழகி வண்ணத்துப்பூச்சி இனத்தின் இடம்பெயர்வு ஆனது நீண்ட தூரம் மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு மிகவும் ஏற்ற வகையிலானது.