ஐ-டா என்பது உலகின் முதலாவது மிகவும் யதார்த்தமான மனிதனைப் போன்று தோற்றமளிக்கும் ரோபோ ஓவியர் ஆகும்.
இது ஐடன் மெல்லர் என்பவரின் சிந்தனையால் உருவானதாகும்.
இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
ஆங்கிலக் கணிதவியலாளரும் எழுத்தாளரும் உலகின் முதல் கணிணிக் குறியீட்டாளர் என அடிக்கடிக் குறிப்பிடப்படுபவருமான அடா லவ்லேஸின் பெயரையடுத்து இதற்கு ஐ-டா என பெயரிடப்பட்டது.
இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.