ககன்யான் பயிற்சி @ ரஷ்யா - குடிமக்கள் பரிட்சயம் @ VSSC
October 12 , 2019 1873 days 766 0
இந்தியாவின் முதலாவது மனித விண்வெளித் திட்டமான ‘ககன்யான்’ என்ற திட்டமானது 2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் செலுத்தப்பட இருகின்றது.
அனுபவம் வாய்ந்த இந்திய விமானப் படை விமானிகளிடமிருந்துப் பெறப்படும் ககன்யான் குழுவினருக்கான பயிற்சியானது ஏற்கனவே ரஷ்யாவில் தொடங்கி விட்டதாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (Vikram Sarabhai Space Centre - VSSC) இயக்குனரான S.சோம்நாத் தெரிவித்துள்ளார்.
குறுகிய கால அளவு கொண்ட ககன்யான் திட்டமானது பூமியிலிருந்து 300-400 கி.மீ தூரத்திற்குள் புவியின் தாழ் சுற்று வட்டப் பாதையில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
மேலும் உலக விண்வெளி வாரம் - 2019 மற்றும் குடிமக்கள் பரிட்சயத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள 400 மூத்த குடிமக்களையும் VSSC இதற்காக அழைத்துள்ளது.