TNPSC Thervupettagam

ககன்யான் மற்றும் இரஷ்யா

July 2 , 2019 1974 days 767 0
  • இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக இரஷ்யாவினைச் சேர்ந்த கிளாவ்கோஸ்மோஸ் என்ற அமைப்புடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - Indian Space Research Organisation) ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • விண்வெளி போன்ற ஒரு சூழல், பரவளைய விமானங்கள் மற்றும் விண்கலத்தில் இருப்பதற்கான பயிற்சி ஆகிய செயல்பாடுகள் இந்தியாவிற்கு வெளியே மேற்கொள்ளப் படவிருக்கின்றன.
  • ககன்யான் என்பது மனிதர்களை விண்ணின் சுற்றுப்பாதைக்குக் கொண்டுச் செல்லும் ஒரு விண்கலமாகும். இது விண்வெளிக்கு 3 மனிதர்களை 7 நாட்களுக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • ISRO தனது முதலாவது மனிதர்களை விண்ணிற்குக் கொண்டுச் செல்லும் விண்வெளித் திட்டமான “ககன்யானை” 2022 ஆம் ஆண்டில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்