அறிவியல் ஆய்வாளர்கள் முதல் முறையாக செயற்கைக் கருத்தரித்தல் (IVF) மூலம் ஒரு கங்காருவின் கருக்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி உலகம் முழுவதும் IVF செயல்முறை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஜெர்மனியில் உள்ள அறிவியலாளர்கள் உலகில் முதன்முதலில் IVF மூலம் உருவாக்கப்பட்ட காண்டாமிருகத்தின் ஒரு கருவை மற்றொரு உடலில் செலுத்தினர்.