TNPSC Thervupettagam

கங்கா ஹரிதீமா யோஜனா

April 10 , 2018 2292 days 738 0
  • கங்கா பசுமையாக்கல் திட்டம் (Ganga Greenery scheme) என்றழைக்கப்படும் கங்கா ஹரிதீமா யோஜனா (Ganga Hariteema Yojana)  என்ற திட்டத்தை கங்கை நதிப் படுகையில் அமைந்துள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தின் 27 மாவட்டங்களில் அம்மாநில அரசு  தொடங்கியுள்ளது.
  • மண் அரிப்பை (Land erosion) கட்டுப்படுத்துவதும், கங்கை நதியினுடைய நீர்பிடிப்புப் பகுதிகளில் (Catchment areas) பசுமைப் பரப்பை (green cover) அதிகரிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
  • “ஒரு நபர் ஒரு மரம்” என்ற முழக்கத்தின் (‘One Person One Tree’ slogan) கீழ் தங்களுடைய சொந்த தனியார் நிலங்களில் மரங்களை நடுவதற்கு பொது மக்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்படுவர்.
  • இத்திட்டத்தின் கீழ், கங்கை நதியின் இருபுற கரைகளிலிருந்தும் 1 கி.மீ பரப்பிற்கு மரம் நடுதல் மேற்கொள்ளப்படும்.
  • உலக ஓசோன் தினமான (world Ozone Day)    செப்டம்பர் 16 அன்று இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • மாநிலத்தின் வனத்துறையானது இத்திட்டத்தை  செயல்படுத்தும் முதன்மைத்  துறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மாநில முதலமைச்சர் தலைமையிலான உயர் அதிகாரக் குழு (High power committee) இத்திட்டத்தின் அமலாக்கத்தை கண்காணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்