ஆயுதம் ஏந்திய கங்கை பாதுகாப்புப் படையை அமைக்க முன்மொழியும் சட்ட வரைவை மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகமானது தயாரித்துள்ளது.
இந்தப் படையானது, கங்கை நதியை அசுத்தப்படுத்தும் குற்றத்தை செய்பவர் எவராக இருந்தாலும் கைது செய்து இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் அதிகாரம் கொண்டதாகும்.
தேசிய கங்கை குழு மற்றும் தேசிய கங்கை புனரமைப்பு ஆணையம் ஆகிய இரண்டும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி கங்கை நதியைப் பாதுகாக்க இந்தச் சட்ட வரைவானது எண்ணுகின்றது.