கங்கை நதியில் 49 சதவிகிதம் அதிக பல்லுயிர்ப் பெருக்கம்
November 12 , 2020 1479 days 676 0
சமீபத்தில் இந்திய வனவுயிர் அறக்கட்டளை மையமானது கங்கை நதி குறித்த ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, கங்கை நதியின் 49% பகுதியானது அதிகப் பல்லுயிர்ப் பெருக்கம் கொண்டதாக உள்ளது.
இந்த ஆய்வானது மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படும் தேசியத் தூய்மை கங்கைத் திட்டத்தின் சார்பாக இந்திய வனவுயிர் அறக்கட்டளை மையத்தினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
உத்தரகாண்ட்டில் உள்ள ராஜாஜி தேசியப் பூங்கா, பீகாரில் உள்ள விக்ரமஷீலா கங்கை ஓங்கில் (டால்பின்) சரணாலயம், ஹஸ்தினாபூர் வனவிலங்குச் சரணாலயம் ஆகியவை இந்த 10% உயர் பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளாகும்.
கங்கை நதியில் கங்கை ஓங்கில்கள் மற்றும் நீர்நாய்கள் எண்ணிக்கையில் அதிகரித்து உள்ளன.
இது கங்கை நதியில் மாசுபாட்டு அளவானது குறைந்துள்ளதையும் அந்த நதியானது ஆரோக்கியமான நிலையில் உள்ளதையும் குறிக்கின்றது.