தேசியப் பசுமை தீர்ப்பாயம் (NGT) ஆனது, பிரயாக்ராஜில் உள்ள கங்கை மற்றும் யமுனை ஆகிய நதிகளில் அதிக மலக்குடற் பற்றுயிரி பாக்டீரியாக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) அறிக்கையானது, பிரயாக்ராஜ் நதி சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள இரு நதிகளின் ஊடே பல்வேறு இடங்களில் அதிக அளவு மலக் குடற் பற்றுயிரி பாக்டீரியாக்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
மனிதரின் அல்லது கால்நடைகளின் கழிவுகள் கலப்பதால் அந்த நதிகளின் நீரில் மலக் குடற் பற்றுயிரி கலப்பு ஏற்படுகிறது.
இந்தப் பாக்டீரியாக்களின் அளவுகள் அடன்கு நீரின் தரத்தைக் குறிப்பதோடு, நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்காணிக்க உதவுகிறது.
கங்கையில் உள்ள மொத்த மலக்குடற் பற்றுயிரி பாக்டீரியாக்களின் அளவுகள் (மலம் மற்றும் பிற) எப்போதும் காணப்படும் அளவை விட 1,400 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
அவை யமுனை மற்றும் பிரயாக்ராஜ் நதியின் சில இடங்களில் 660 மடங்கு அதிகமாக இருந்தன.
2004 ஆம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட குழுவானது, மலக் குடற் பற்றுயிரி ஆனது 500 MPN/100ml என்ற ஏற்கத் தக்க வரம்பில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.