கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபை ஒருமனதாக ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி உள்ளது.
இந்தத் தீர்மானமானது 1974 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது.
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று, கச்சத்தீவு தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு வருத்தம் தெரிவிக்கும் தீர்மானத்தினை தமிழக சட்டமன்றம் அப்போது நிறைவேற்றியது என்பதோடு இலங்கையுடனான அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில், கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 03 மற்றும் 2013 ஆம் ஆண்டு மே 03 ஆகிய தேதிகளில் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
O. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ஆம் தேதி அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கச்சத்தீவு என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாக் நீர்ச் சந்தியில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மக்கள் வசிக்காத தீவாகும்.
17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் வம்சத்தின் கீழ், இராமநாதபுரம் ஜமீன்தார் மக்களின் கட்டுப்பாட்டில் இது இருந்தது.
1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ், இந்தத் தீவு உடனே இலங்கைக்கு மாற்றப்பட்டது.