TNPSC Thervupettagam

கச்சத் தீவு ஆலயத் திருவிழா

March 8 , 2020 1596 days 623 0
  • இலங்கையின் கச்சத் தீவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழாவானது தொடங்கியது.
  • இரு அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் படி, இந்தியக் குடிமக்கள் கச்சத் தீவிற்கு வருகை தர இந்திய கடவுச் சீட்டு அல்லது இலங்கையின் நுழைவு இசைவு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • புனித அந்தோணியாா் என்பவர் கடல் மாலுமிகளின் துறவியாக வணங்கப் படுகின்றார்.
  • இந்த ஆலயமானது கச்சத் தீவில் அமைந்துள்ள ஒரே கட்டமைப்பாகும். இது கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்டது.
  • இது இலங்கையால் நிர்வகிக்கப்படும் குடியிருப்பில்லாத ஒரு தீவாகும். இது 1976 ஆம் ஆண்டு வரை இந்தியாவால் உரிமை கோரப்பட்ட ஒரு சர்ச்சைக்குரியப் பிரதேசமாகும்.
  • 1974 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட நிபந்தனை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத் தீவு மீதான இலங்கையின் உரிமையை இந்தியா அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்