TNPSC Thervupettagam

கச்சா சணல் - குறைந்தபட்ச ஆதரவு விலை

April 28 , 2018 2259 days 857 0
  • பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்கள் மீதான மத்திய அமைச்சரவைக்   குழுவானது  2018-2019 ஆண்டு பருவ காலத்திற்கு கச்சா சணல் பயிருக்கு  (Raw Jute)  குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum Support Price-MSP) உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது.
  • கச்சா சணலின் நியாயமான சராசரி தரத்திற்கு (Fair Average Quality -FAQ)   குறைந்தபட்ச ஆதரவு விலையானது    2017-2018 ஆம் ஆண்டு பருவத்தின்      குவிண்டாலுக்கு ரூ.3500 என்ற விலையிலிருந்து 2018-19 ஆம்  ஆண்டு பருவத்திற்கு  குவிண்டாலுக்கு ரூ.3700 என அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தினுடைய (Commission for Agricultural Costs and Prices - CACP) பரிந்துரைகள் அடிப்படையில் கச்சா சணலிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்திய சணல் கழகமானது (Jute Corporation of India - JCI) சணல் சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில் குறைந்த பட்ச ஆதரவு விலைகளில் விலை ஆதரவுச் செயல்பாடுகளை (price support operations) மேற்கொள்ளும் மத்திய முதன்மை நிறுவனமாக தொடர்ந்து செயல்படும்.

  விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம்

  • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகத்தின் (Ministry of Agriculture and Farmers Welfare) ஓர் இணைப்பு  அலுவலகமே (attached office)  விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம்  ஆகும். 1965ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இந்த ஆணையம் செயல்பட்டு வருகின்றது.
  • பொருளாதார விவகாரங்கள் மீதான மத்திய அமைச்சரவைக்  குழுவிற்கு பல்வேறு பயிர்கள் மீது அவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளை பரிந்துரைக்கும் ஓர் நிபுணர் அமைப்பே  விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம்  ஆகும்.
  • உற்பத்திச் செலவு (cost of production), உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் பயிர்களுக்கான விலை ஏற்ற இறக்கப் போக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம்  பல்வேறு  பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக  மத்திய அமைச்சரவைக்   குழுவிற்கு  பரிந்துரைகளை  வழங்கும்.
  • தற்போது நடப்பில் CACP-ல் ஓர் தலைவர், ஓர் உறுப்பினர் செயலாளர், அரசு உறுப்பினர் ஒருவர் (Official), அரசு அதிகாரி அல்லாத (Non-Official) இரு உறுப்பினர்கள் உள்ளனர்.
  • இந்த அரசு அதிகாரிகள் அல்லாதா இரு உறுப்பினர்களும் விவசாயச் சமுதாயத்தின் (farming community) பிரதிநிதிகளாவர். மேலும்  பொதுவாக வேளாண் சமூகத்தோடு பெரும் தொடர்பினை உடையராவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்