கச்சா பாமாயில், கச்சா சோயா எண்ணெய், மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை வரியை 2.5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக இந்திய அரசு குறைத்துள்ளது.
இந்த எண்ணெய்கள் மீதான வேளாண் வரியானது கச்சா பாமாயிலுக்கு 20 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு இது 5% என்ற அளவிற்குக் குறைக்கப்பட்டுள்ளது.
RBD பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றிற்கு இது தற்போதைய 32.5 சதவீதத்திலிருந்து 17.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.