TNPSC Thervupettagam

கஜீரஹோ நடனத் திருவிழா

February 22 , 2018 2498 days 825 0
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள கஜீரஹோ கோவில் நகரில் 44- ஆவது கஜீரஹோ நடனத் திருவிழா (Khajuraho Dance Festival) துவங்கியுள்ளது.
  • மத்திய பிரதேச அரசின் மாநில கலாச்சார துறையினால் இத்திருவிழா நடத்தப்படுகிறது.
  • 6 நாட்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவில் கதக் (Kathak), ஒடிஸி (Odissi), பரதநாட்டியம் (Bharathanatyam), குச்சுப்புடி (Kuchipudi), கதக்களி (Kathakali) மற்றும் மோகினியாட்டம் (Mohiniattam) உட்பட பல்வேறு நடனங்கள் காட்சிப் படுத்தப்பட உள்ளன.
  • மேலும் இவ்வருடம் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக ஜெர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் பல்வேறு நாடுகளினைச் சேர்ந்த சர்வதேச கலைஞர்களின் ஓவியங்களை காட்சிப்படுத்துவதற்காக கலைச் சந்தை (Art Mart) ஒன்றும் நடத்தப்பட உள்ளது.
  • வழக்கமாக, இத்திருவிழாவின் போது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்வ நாதா ஆலயம் (Vishwanatha Temple) மற்றும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சித்ரகுப்தா ஆலயம் (Chitragupta Temple) ஆகிய ஆலயங்களின் முன்பு திறந்தவெளி அரங்கேற்ற மேடைகளில் நடனங்கள் இயற்றப்படும்.
  • கி.பி. 950 – கி.பி. 1050 க்கு இடைப்பட்ட காலத்தில் சண்டேலா (Chandela) வம்ச ஆட்சியாளர்களால் கஜீரஹோவில் இக்கோயில்கள் கட்டப்பட்டன.
  • இக்கோவிலில் உள்ள பாலுணர்வு வெளிப்படுத்துக் கற்சிலைகள் (Erotic Sculptures) உலகம் முழுவதும் அறியப்படுபவையாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்