TNPSC Thervupettagam

கடந்த 2,000 ஆண்டுகளில் இல்லாத வெப்பமான ஆண்டு

May 20 , 2024 42 days 109 0
  • 2023 ஆம் ஆண்டின் கோடை காலமானது, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக வடக்கு அரைக்கோளத்தில் பதிவான மற்ற கோடைக் காலங்களை விட மிக வெப்பமானதாக இருந்தது.
  • உலகளாவிய நவீன வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கிய 1850 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவாகும் என்று அறிவியல் நிபுணர்கள் முன்பே தீர்மானித்தனர்.
  • கடந்த ஆண்டின் கோடை காலத்தின் அதீத வெப்பம் ஆனது நவீன காலப் பதிவுகளை விஞ்சியதோடு மட்டுமின்றி, கிபி 246 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கருவிசார் பதிவுகளுக்கு முன்னதாக இருந்த வெப்பமான கோடைக் காலத்தை - அரை டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் விஞ்சியது.
  • இது (கிபி 536 ஆம் ஆண்டில்) பொதுவான கோடையை விட கிட்டத்தட்ட 4 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்தது
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்றச் சேவை நிறுவனம் ஆனது, 2023 ஆம் ஆண்டு சுமார் 100,000 ஆண்டுகளில் மிகவும் வெப்பமானதாக இருப்பதற்கு "மிக அதிக சாத்தியம் உள்ளதாக" கூறியது.
  • 1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒவ்வோர் ஆண்டும் வெப்ப அலைகள் காரணமாக 43 நாடுகளில் 150,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்