TNPSC Thervupettagam

கடனளிப்போர்களுக்கிடையேயான ஒப்பந்தம் (Inter Creditor Agreement - ICA)

July 31 , 2018 2310 days 724 0
  • தொழிற்கூட்டமைப்பு கடனளிப்பின் கீழ் 50 கோடி ரூபாய் (அ) அதற்கு மேற்பட்ட பாதிப்புக்குள்ளான சொத்துக்களை விரைவாக பிரிப்பதனை நோக்கமாக கொண்டு கடனளிப்போர்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கையெழுத்திட்டன.
  • ICA கட்டமைப்பு ‘சஷாக்‘ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இதன் கீழ், முன்னணி கடனளிப்பவர் அவரின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்ட சொத்துக்களின் மீட்பு நடவடிக்கைக்கான உறுதித் திட்டங்களை முறைப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்படுவார்.
  • ICA-வின் கீழ் முறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்கள் RBI-ன் விதிமுறைகள் மற்றும் இதர அனைத்து சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றோடு உடன்பாட்டுடன் இருக்கும்.
  • பாதிப்புக்குள்ளான சொத்துக்களை மீட்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து ஒரு மேடையாக செயல்பட இந்த ஒப்பந்தமானது அரசால் அமைக்கப்பட்ட சுனில் மேத்தா குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு இந்திய வங்கிகள் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்