கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கான அபராதக் கட்டணங்களுக்கான வழி காட்டுதல்கள்
August 22 , 2023 460 days 274 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, ‘நியாயமான கடன் வழங்கீட்டு நடைமுறை - கடன் நிலுவைகள் மீதான அபராதக் கட்டணங்கள்’ என்ற தலைப்பிலான ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இது வணிக மற்றும் பிற வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் பிற கடன் வழங்கீட்டு நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
அபராத வட்டி குறித்தத் தகவல்களை வெளிப்படுத்துவதில் நியாயத் தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் கடனைத் திரும்பச் செலுத்த தவறினால் அல்லது கடன் வாங்கும் விதிமுறைகளுக்கு இணங்க முடியாத போது, கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் அபராதம் விதிக்கலாம்.
ஆனால் இவை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அத்தகைய அபராதத்திற்கு வட்டி வசூலிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.