TNPSC Thervupettagam
March 29 , 2018 2286 days 797 0
  • ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி (Export-Import Bank - Exim Bank) மேற்கு தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்க முதலீடு மற்றும் மேம்பாட்டிற்கான ECOWAS வங்கிக்கு (ECOWAS Bank for Investment and Development - EBID) 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் வசதியை (credit facility) அளிக்க உள்ளதாக கூறியுள்ளது.
  • இந்த கடன் சார்புத் தொடர்  (Line of Credit - LoC) ஒப்பந்தத்தினை  கையெழுத்திட்டதன் மூலம் எக்ஸிம் வங்கியானது அரசினுடைய ஆதரவோடு  இதுவரை முதலீடு மற்றும் மேம்பாட்டிற்கான ECOWAS  வங்கிக்கு  4 கடன் சார்புத் தொடர்களை அளித்துள்ளது. இதன் மூலம் மொத்த கடன் சார்புத் தொடரினுடைய மதிப்பு 1,000 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் – ECOWAS

  • 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஓர் பிராந்தியக் குழுவே (regional group) மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகமாகும்.
  • லாகோஸ் ஒப்பந்தத்தில் (Treaty of Lagos) கையெழுத்திட்டதன் மூலம் 1975 ஆம் ஆண்டு மே மாதம் இப்பிராந்தியக்  குழு தோற்றுவிக்கப்பட்டது.
  • இச்சமூகத்தின் உறுப்பினர் நாடுகளினுடைய அனைத்து செயல்பாட்டு களங்களிலும் பொருளாதார ஒருங்கிணைப்பை (economic integration) மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
  • இச்சமூகத்திலுள்ள 15 உறுப்பு நாடுகளாவன,
    • பெனின்
    • கேப் வெர்டீ
    • பர்கினா பசோ
    • காம்பியா
    • கோட் டி ஐவோரி
    • கானா
    • கினியா பிசவ்
    • கினியா
    • லைபீரியா
    • மாலி
    • நைஜர்
    • நைஜீரியா
    • செனகல்
    • சியர்ரா லியோன்
    • டோகோ

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்