- ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி (Export-Import Bank - Exim Bank) மேற்கு தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிக்க முதலீடு மற்றும் மேம்பாட்டிற்கான ECOWAS வங்கிக்கு (ECOWAS Bank for Investment and Development - EBID) 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் வசதியை (credit facility) அளிக்க உள்ளதாக கூறியுள்ளது.
- இந்த கடன் சார்புத் தொடர் (Line of Credit - LoC) ஒப்பந்தத்தினை கையெழுத்திட்டதன் மூலம் எக்ஸிம் வங்கியானது அரசினுடைய ஆதரவோடு இதுவரை முதலீடு மற்றும் மேம்பாட்டிற்கான ECOWAS வங்கிக்கு 4 கடன் சார்புத் தொடர்களை அளித்துள்ளது. இதன் மூலம் மொத்த கடன் சார்புத் தொடரினுடைய மதிப்பு 1,000 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் – ECOWAS
- 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஓர் பிராந்தியக் குழுவே (regional group) மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகமாகும்.
- லாகோஸ் ஒப்பந்தத்தில் (Treaty of Lagos) கையெழுத்திட்டதன் மூலம் 1975 ஆம் ஆண்டு மே மாதம் இப்பிராந்தியக் குழு தோற்றுவிக்கப்பட்டது.
- இச்சமூகத்தின் உறுப்பினர் நாடுகளினுடைய அனைத்து செயல்பாட்டு களங்களிலும் பொருளாதார ஒருங்கிணைப்பை (economic integration) மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
- இச்சமூகத்திலுள்ள 15 உறுப்பு நாடுகளாவன,
- பெனின்
- கேப் வெர்டீ
- பர்கினா பசோ
- காம்பியா
- கோட் டி ஐவோரி
- கானா
- கினியா பிசவ்
- கினியா
- லைபீரியா
- மாலி
- நைஜர்
- நைஜீரியா
- செனகல்
- சியர்ரா லியோன்
- டோகோ