அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று உள்ளூர்த் தயாரிப்புகளுக்கு மதிப்பு மிக்க புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
அவை கடமா பாலடைக்கட்டி (சுர்பி), காம்தி அரிசி மற்றும் டாங்சா ஜவுளி ரகம் ஆகியவையாகும்.
அருணாச்சலி கடமாவின் பாலில் இருந்து சுர்பி தயாரிக்கப்படுகிறது.
இது அம்மாநிலத்தின் மேற்கு கமெங் மற்றும் தவாங் மாவட்டங்களில் காணப்படும் ஒரு தனித்துவமான இனமாகும்.
இது ப்ரோக்பாஸ் எனப்படும் பழங்குடி யாக் கால்நடை மேய்ப்பாளர்களால் வளர்க்கப் படுகிறது.
அவர்கள் கோடைக்காலத்தில் தங்கள் கடமாக்களுடன் சேர்ந்து உயர்வான இடங்களுக்கும் (10,000 அடி மற்றும் அதற்கு மேற்பட்ட உயரத்தில்) இடம் பெயர்ந்து, குளிர்காலத்தில் நடுத்தர உயரமான மலைப் பகுதிகளுக்கும் சென்று வசிக்கின்றனர்.
கோடை காலத்தில் கடமா இனங்கள் குறைந்த உயரத்தில் அமைந்த நிலப்பரப்பில் உயிர் வாழ முடியாது.
எனவே அவற்றை 13,000 அடிக்கு அப்பால் அமைந்த பகுதிகளுக்கு இடம் பெயர்த்த வேண்டும்.
நம்சாய் பிராந்தியத்தின் காவ் தை எனப்படும் மெல்லத் தக்க வகையிலான ஒரு வகை ஒட்டும் அரிசி ரகம் ஆகும்.
இது பாரம்பரிய காம்ப்தி பழங்குடி விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.
சாங்லாங் மாவட்டத்தின் டாங்சா பழங்குடியினரின் ஜவுளிப் பொருட்கள் அவற்றின் கண்கவர் வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுக்குப் புகழ் பெற்றவை.