அகத்தி தீவில் பெருமளவிலான கடற்சாமந்தி வெளிர்தல் நிகழ்வு பதிவானதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இலட்சத்தீவில் பவளப்பாறை வெளிர்தல் நிகழ்வு ஏற்படுவது ஒரு புதிய நிகழ்வு அல்ல, ஆனால் அந்தத் தீவுக் குழுவில் முதன்முறையாக கடற்சாமந்தி வெளிர்தல் நிகழ்வு பதிவாகியுள்ளது.
வெளிர்தல் நிகழ்வு ஆனது கடற்சாமந்திகளை நோய்களுக்கு ஆளாக்கி, அதன் அழிவினை அதிகரிக்கிறது.
கடற்சாமந்தி மென்மையான உடல்கள் மற்றும் கொட்டும் திறன் கொண்ட நீர்வாழ் உயிரினம் ஆகும்.
அவை பவளப்பாறைகள் மற்றும் உயிருள்ளப் பாறைகளின் நெருங்கிய ஒரு இணை உயிரினமாகும்.