கடற்கரை மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் Roller-compacted concrete (RCC) கட்டுமான பொருட்கள் மூலம் விமான ஓடுதளம் அமைத்து லட்சத்தீவின் அகத்தி விமான நிலையத்தை விரிவாக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (Airports Authority of India) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடற் நீரினால் சூழப்பட்ட தொடர்பற்ற இரு தனித்தனி நிலப்பகுதிகள் RCC கட்டுமான அமைப்புகளால் நிலப்பாலம் போல் இணைக்கப்பட்டு அவற்றின்மேல் ஏற்கனவே உள்ள நீண்ட ஓடுதளம் விரிவுப்படுத்தப்படும்.
இத்தகு நீண்ட விமான ஓடு பாதையின் மூலம் பெரும் ATR வகை விமானங்களையும் இத்தீவில் இயக்க இயலும்.
கடற் நிலப் பாலத்தின் மீது வெற்றிகரமாக விமான ஓடு தளம் அமைக்கப்பட உள்ளது இந்தியாவில் இதுவே முதன்முறையாகும்.
தற்போது இவ்விமான நிலையத்தில் சிறு டர்போ விமானங்கள் (Turbo Props) மட்டுமே இயங்குகின்றன.
இந்த விமான ஓடுதளம் கட்டிமுடிக்கப்பட்டால் இவற்றில் பெரிய ATR-72 விமானங்களை இயக்க இயலும்.
இதற்கு முன் இதே போன்ற திட்டம் மும்பையின் ஜூஹீ (Juhu) விமான நிலையத்திலும், இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு (Kullu) விமான நிலையத்திலும் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் அவை அவ்விடத்திற்கு பொருத்தமில்லாததாக இருந்ததன் காரணமாக கைவிடப்பட்டன.