TNPSC Thervupettagam

கடற்படைதளம் – இந்தியா முன்மொழிவு

April 5 , 2018 2425 days 746 0
  • செசெல்ஸ் நாட்டின் அதிபரான டேனி பௌர் (Danny Faure), செசெல்ஸ் அரசானது   இந்தியாவுடனான அஸம்ஸன் தீவுத் திட்டத்தை (Assomption island project)  முன்னெடுத்துச் செல்ல போவதில்லை என  செசெல்ஸ் நாடாளுமன்றத்தில்    தெரிவித்துள்ளார்.
  • செசெல்ஸ் நாட்டின் அஸம்ஸன் தீவில் (Assumption Island) இராணுவத் தளத்தை கட்டமைப்பதற்கு அந்நாட்டுடன் இந்தியா ஓர் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இரு மாதங்கள் ஆன பிறகும், இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற செசெல்ஸ் நாட்டின் எதிர் கட்சிகள் மறுத்ததால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளின் தீவுக் கூட்டமே (Archipelago) செசெல்ஸ் நாடாகும்.
  • உலகின் மிகவும் பரபரப்பான கடல் வழிப் பாதைகளுள் ஒன்றான சூயஸ் கால்வாயிற்கு அருகில்  டிஜிபோட்டி நாட்டில் சீனா தனது முதல்  வெளிநாட்டு இராணுவத் தளத்தை தொடங்கியதைத் தொடர்ந்து, சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த செசெல்ஸ் நாட்டில் ஓர் இராணுவத் தளத்தை அமைக்க இந்தியா, செசெல்ஸ் நாட்டுடனான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

செசெல்ஸ் ஒப்பந்தம்

  • செசெல்ஸ் ஒப்பந்தமானது 2015 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமரின் செசெல்ஸ் நாட்டிற்கான அரசுப் பயணத்தின் போது   இந்தியா மற்றும் செசெல்ஸ் நாட்டிற்கிடையே கையெழுத்திடப்பட்டது. செசெல்ஸ் பாராளுமன்றம் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததன் காரணமாக இந்த ஒப்பந்தத்தில் சில சச்சரவுகள் ஏற்பட்டன.
  • இந்தியாவிற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த ஒப்பந்தத்தின்படி செசெல்ஸ் மற்றும் மொரிசியஸ் நாட்டின்  அகாலேகா தீவில் (Agalega island)   இராணுவத் தளங்களை அமைக்க இவ்வொப்பந்தம் இந்தியாவிற்கு வழி அமைத்துத் தருகிறது..
  • இது இந்தியப் பெருங்கடலில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பு முக்கியத்துவ நிலைப்பாட்டை விரிவுபடுத்துவதற்கான ஓர் முக்கிய நகர்வாகும்.
  • சட்ட விரோத மீன் பிடிப்பு, வேட்டையாடுதல், போதைப் பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் உட்பட முக்கியமான பொருளாதார குற்றவாளிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கு மேம்படுத்தப்பட்ட பிரத்தியேக பொருளாதார மண்டலக் கண்காணிப்பை (enhanced EEZ surveillance)  ஏற்படுத்துவதிலும் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் (anti-piracy operations) இரு நாடுகளிடையே  ஓர் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்