இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கடற்படை தளபதிகள் மாநாட்டின் துவக்க அமர்வில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
இந்த 4 நாள் மாநாட்டில், இந்தியக் கடற்படை இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டம் சார்ந்த படையனுப்பும் கொள்கை ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய படையனுப்பும் கொள்கை பிரதமரின் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (Security and Growth for All in the Region - SAGAR) என்ற தொலைநோக்குடன் ஒத்துப்போகும் வகையில் உள்ளது.