மத்திய அரசானது, ‘இந்தியாவில் கடற்பாசிகளை இறக்குமதி செய்வதற்கான சில வழி காட்டுதல்களை’ அறிவித்துள்ளது.
கடலோர சமூகங்கள் சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளைக் கண்டறிய உதவுவதற்காக என்று உயர்தரக் கடற்பாசி விதைகள் அல்லது மூலவுயிர் முதலுருக்களை இறக்குமதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதைய இப்புதிய வழிகாட்டுதல்களின் படி கடற்பாசிகளை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் மீன்வளத் துறையிடம் விரிவான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனை வெளிநாட்டு நீர்வாழ் உயிரினங்களை இந்தியப் பெருங்கடல்களில் அறிமுகப் படுத்துவதற்கான தேசியக் குழு மதிப்பாய்வு செய்யும்.
இந்த ஒப்புதலின் பேரில், உயர்தரக் கடற்பாசி மூலவுயிர் முதலுருக்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக என்று, நான்கு வாரங்களுக்குள் இறக்குமதி அனுமதியை துறை வழங்கும்.