TNPSC Thervupettagam

கடற்பாசி மதிப்புச் சங்கிலி மேம்பாடு

August 24 , 2024 91 days 133 0
  • சமீபத்தில், நிதி ஆயோக் அமைப்பானது இந்தியாவில் கடற்பாசி சாகுபடியை நன்கு ஊக்குவிப்பதற்காக ஒரு விரிவான செயல்திட்டத்தினை வகுத்துள்ளது.
  • இது "கடற்பாசி மதிப்புச் சங்கிலி மேம்பாட்டிற்கான உத்தி" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • வேர், தண்டு மற்றும் இலைகள் இல்லாத பிரதானமான, கடல் சார் பூக்காத கடற் பாசிகள் ஆனது கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • பெரிய அளவிலான இந்தக் கடற்பாசிகள் ஆழமான கடல்பகுதியில் கெல்ப் காடுகள் எனப்படும் காடுகளை உருவாக்குகின்றன.
  • இந்தியாவானது, முதன்மையாக தமிழ்நாட்டில், இயற்கையான படுகைகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 33,345 டன் (ஈரமான எடை) கடற்பாசிகளை சாகுபடி செய்கிறது.
  • இந்தியாவின் வருடாந்திரக் கடற்பாசி வருவாய் சுமார் 200 கோடி ரூபாயுடன் உலக உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவானப் பங்கினையே அளிக்கிறது.
  • 2018-19 ஆம் ஆண்டில் 7.28% ஆக இருந்த வேளாண்மையில் சார்பு நிலைத் துறையின் மொத்த மதிப்பின் பங்கை 2024-25 ஆம் ஆண்டில் 9% ஆக உயர்த்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், உலகளாவிய கடற்பாசி சந்தை மதிப்பு 9.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியக் குடியரசு மற்றும் மலேசியா ஆகியவை முக்கிய கடற்பாசி வர்த்தக நாடுகளில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்