கடலடித் துறைமுகப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு
March 7 , 2024 266 days 299 0
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள INS உட்க்ரோஷ் மையத்தில் ஒரு வான ஊர்திப் போக்குவரத்து நெறிப்படுத்தி ரேடார் (PAR) தொடங்கப்பட்டது.
இது "கனமழை மற்றும் மூடுபனி போன்ற குறைந்த கட்புலனாகும் நிலைகளில் விமானங்களைக் கிடைமட்ட மற்றும் செங்குத்து நிலையில் பாதுகாப்பாக தரை இறக்குவதற்காக மிகவும் துல்லியமான வழிகாட்டுதலை" வழங்கும்.
போர்ட் பிளேயர் துறைமுகத்திலுள்ள கடல்சார் கப்பல் துறையில் ஒருங்கிணைந்த கடலடித் துறைமுகப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (IUHDSS) ஆனது திறக்கப் பட்டது.
இது கடல்சார் கப்பல் துறைக்கு அருகில் உள்ள மேற்பரப்பு மற்றும் கடலுக்கடியில் உள்ள இலக்குகளைக் கண்டறிந்து, அடையாளம் கண்டு மற்றும் கண்காணிக்கும் திறன் கொண்டதால், போர்ட் பிளேயர் துறைமுகத்தின் பெரும் பாதுகாப்பை அது மேம்படுத்துகிறது.