TNPSC Thervupettagam

கடலடி கம்பிவடக் கூட்டமைப்பு

February 24 , 2022 914 days 483 0
  • தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் லிமிடெட் என்ற நிறுவனமானது தென்கிழக்கு ஆசியா-மத்திய ஆசியா-மேற்கு ஐரோப்பா – 6 கடலடி கம்பிவடக் கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • அதனுடைய அதிவேக உலகளாவிய இணையக் கட்டமைப்புத் திறனை மேம்படுத்தச் செய்வது மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தேவையை நிவர்த்தி செய்வது போன்றவற்றிற்கான முயற்சியில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • இது கம்பிவட அமைப்பின் ஒட்டு மொத்த முதலீட்டில் 20% முதலீட்டினை வழங்க உள்ளது.
  • இந்தக் கூட்டமைப்பின் மூலம் ஏர்டெல் நிறுவனம் தனது உலகளாவிய இணையக் கட்டமைப்பில் 100 TBPS இணையத் திறனை இணைக்க இயலும்.
  • அந்தத் தொலைத் தொடர்பு நிறுவனமானது SEA-ME-WE-6 கம்பிட அமைப்பினை மும்பை மற்றும் சென்னை ஆகிய புதிய நிலையங்களில் நிறுவ உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்