சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய நாடுகளை இணைப்பதற்காக இரண்டு புதிய கடலடி கம்பிவடங்களை (Undersea cables) அமைப்பதற்கு பேஸ்புக் (முக நூல்) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டமானது கூகுள் மற்றும் பிராந்தியத் தகவல் தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப் படுகிறது.
இத்திட்டம் இந்தப் பகுதிகளுக்கிடையேயான இணையதள வசதியை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
Echo மற்றும் Bifrost எனப் பெயரிடப்பட்ட இந்தக் கம்பிவடங்கள் ஜாவா கடலைக் கடக்கும் ஒரு பலதரப்பட்ட பாதையினூடே செல்லும் முதல் இரண்டு கம்பிவடங்கள் ஆகும்.