TNPSC Thervupettagam

கடலோர மீன்வளர்ப்பு ஆணையம் (திருத்தம்) மசோதா – 2023

August 19 , 2023 338 days 199 0
  • 2023 ஆம் ஆண்டு கடலோர மீன்வளர்ப்பு ஆணையம் (திருத்தம்) மசோதாவானது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவானது, தெளிவற்ற நிலைகளை நிவர்த்தி செய்யவும், நிர்வாகச் செயல் முறைகளை நெறிமுறைப் படுத்தவும், வளர்ந்து வரும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும் முயல்கிறது.
  • அனைத்துக் கடலோர மீன்வளர்ப்பு நடவடிக்கைகளையும் இந்தச் சட்டத்தினுடைய ஒரு வரம்பின் கீழ் கொண்டு வருவதை இந்தத் திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இது கடலோர மீன் வளர்ப்பு முறையின் பல்வேறு அம்சங்களுக்கு இடையே உள்ள ஒரு தெளிவின்மையை நீக்குகிறது.
  • இறால் வளர்ப்பிற்கு அப்பாற்பட்ட, மேலும் பல சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான மீன்வளர்ப்பு நடைமுறைகளின் பரிணாம வளர்ச்சியை இது அங்கீகரிக்கிறது.
  • இது ஆணையத்தினால் மதிப்பிடப்படும் சுற்றுச்சூழல் தொடர்பான சேதம் அல்லது வீழ்ச்சிகளுக்கு ஆகும் பல்வேறு செலவினங்களை இந்த மீன்வளர்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏற்க வேண்டும் என்ற 'மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கான கட்டணக் கொள்கையை' வலியுறுத்துகிறது.
  • மீன்குஞ்சுப் பொரிப்பகங்கள், இனப்பெருக்க விலங்கினப் பெருக்கல் மையங்கள் (BMC), மற்றும் உட்கரு இனப்பெருக்க மையங்கள் (NBC) போன்ற நிறுவனங்கள் தற்போது கடல் அலையேற்றக் கோட்டுப் பகுதியிலிருந்து (HTL) 200 மீட்டர் தொலைவிற்குள் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்