TNPSC Thervupettagam

கடல்சார் உணவு ஏற்றுமதி இலக்கு

February 27 , 2023 636 days 341 0
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அனுப்பிரியா படேல் அவர்கள் சமீபத்தில் கொல்கத்தாவில் இந்திய சர்வதேச கடல்சார் உணவுக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார்.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் 14 பில்லியன் டாலர் என்ற இலட்சிய ஏற்றுமதி இலக்கை அடைவதற்காக இந்தியாவின் கடல்சார் உணவுத் தொழில்துறைகள் தனது உத்தியை மாற்றியமைத்து வருகிறது.
  • 2021-22 ஆம் ஆண்டில், நாட்டின் கடல்சார் உணவு ஏற்றுமதி 7.76 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • இது மொத்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் 17% ஆகும்.
  • தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்பான கடல்சார் உணவுப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
  • 2022 ஆம் நிதியாண்டில் 7.76 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் கடல்சார் உணவு ஏற்றுமதியில் 43 சதவீதப் பங்கினை அமெரிக்கா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்