இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (IOR) பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை உறுதி செய்வதில் IPMDA போன்ற வலையமைப்புகள் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குவது ஒரு முக்கிய செயற்கருவியாக இருக்கும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
2022 ஆம் ஆண்டு டோக்கியோ உச்சிமாநாட்டில் குவாட் நாடுகளின் குழுவானது (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா) IPMDA கூட்டாண்மையினை அறிமுகப்படுத்தியது.
இது “அடையாள மறைப்பு கப்பல் போக்குவரத்தை (dark shipping)” கண்காணிக்கச் செய்வதையும், பங்குதார நாடுகளின் நீர்நிலைகளின் விரிவான மற்றும் துல்லியமான நிகழ்நேர கடல்சார் மதிப்பாய்வு வினை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது பசிபிக் தீவுகள், தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதி (IOR) ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் பெரும் கவனம் செலுத்துகிறது.
அடையாள மறைப்பு கப்பல் போக்குவரத்து என்பது அதன் தானியங்கி அடையாள அமைப்பினை (AIS) நிறுத்திய நிலையில் இயங்கும் கப்பலை விவரிக்கப் பயன்படுத்தப் படும் சொல் ஆகும்.