ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு (UNCTAD) அமைப்பானது 2023 ஆம் ஆண்டிற்கான கடல்சார் போக்குவரத்து மதிப்பாய்வினை வெளியிட்டுள்ளது.
சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மூலமான பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றம் ஆனது ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட 2023 ஆம் ஆண்டில் 20% அதிகமாக இருந்தது.
கப்பல் போக்குவரத்துத் துறையானது உலகின் வர்த்தகத்தில் சுமார் 80% பங்கினைக் கொண்டுள்ளதோடு, உலகளாவிய GHG வாயு உமிழ்வுகளில் சுமார் 3% பங்கினை அளிக்கிறது.
உலகளாவியக் கப்பல்களில் 8 சதவீதக் கப்பல்கள் கனரக எரிபொருள் எண்ணெய், மித ரக எரிபொருள் எண்ணெய் மற்றும் டீசல்/எரிவாயு எண்ணெய் போன்ற வழக்கமான எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன.
1.2% கப்பல்கள் மட்டுமே LNG, LPG, மெத்தனால், மற்றும் குறைந்த அளவில் மின் கலம் / கலப்பு எரிபொருள் போன்ற மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றன.
கொள்கலன் ஏற்றுக் கப்பல் வர்த்தகம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 1.2 சதவீதமும், 2024-2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 3 சதவீதமும் வளரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக அளவுகளில் 2022 ஆம் ஆண்டில் அதீத வளர்ச்சிப் பதிவானது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், வணிகக் கப்பல்கள் சராசரியாக 22.2 ஆண்டுகள் பழமையானவையாகவும், உலகின் பாதிக்கும் மேற்பட்ட கப்பல்கள் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ரீதியில் பழமையானவையாகவும் இருந்தன.