TNPSC Thervupettagam

கடல்நீரைக் குடிநீராக்கும் 4வது ஆலை

April 5 , 2023 602 days 313 0
  • சென்னைப் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியமானது (CMWSSB) சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் 4வது ஆலையினைக் கட்டமைப்பதற்கானப் பணியினை VA டெக் வபாக் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.
  • இந்த ஆலை கட்டி முடிக்கப்பட்டால், சென்னை மாநகராட்சி ஒரு நாளைக்கு சுமார் 750 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட (உப்பு நீக்கப்பட்ட) நீரை உற்பத்தி செய்ய முடியும்.
  • குடிநீரை வழங்குவதற்கும் தண்ணீர்ப் பாதுகாப்பு என்ற இலக்கினை அடைவதற்கும் உப்பு நீக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.
  • தமிழக மாநிலமானது, ஏற்கனவே சென்னைக்கு அருகில் மீஞ்சூர் மற்றும் நெம்மேலி (2013) ஆகிய இடங்களில் செயல்படுகின்ற இரண்டு உப்புநீக்க ஆலைகளைக் கொண்டு உள்ளது.
  • இந்தியாவின் முதல் உப்புநீக்க ஆலையான மீஞ்சூர் 2010 ஆம் ஆண்டில் திறக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்