சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய ‘கடல் அலை ஆற்றல் மாற்றி’ என்ற இயந்திரத்தினை உருவாக்கியுள்ளனர்.
இந்தச் சாதனமானது அடுத்த மூன்று ஆண்டுகளில் கடல் அலைகளிலிருந்து 1 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
‘கடலில் இருந்து உருவாக்கப்பட்டது’ என்று பொருள்படும் வகையில் இந்த சாதனம் ‘சிந்துஜா-I’ என்று பெயரிடப்பட்டுள்ளது.