TNPSC Thervupettagam

கடல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு - இந்தியா மற்றும் பிரான்சு

August 24 , 2019 1827 days 641 0
  • ஏறத்தாழ 10 தாழ் புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள் தொகுப்புகளை மேம்படுத்தி, அவற்றை ஏவ இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
  • இது உலகில் பரந்த பகுதியை உள்ளடக்கும். அதிலும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியின் மீது இது மிகுந்த கவனத்தைச் செலுத்தும். இப்பகுதியில் பிரான்ஸ் தனது ரீயூனியன் தீவுகளுடன் ஒரு உத்திசார் நலனைக்  கொண்டு இருக்கின்றது.
  •  செயற்கைக் கோளை அடிப்படையாகக் கொண்ட அடையாள அமைப்பானது
    • கடற் பகுதியில் நகரும் கப்பல்களின் வரம்பைக் கண்டறிந்து, அவற்றைக் கண்காணித்தல்
    • ஆக்கிரமிப்பு, தீவிரவாதம், திருட்டு, கடத்தல் ஆகியவற்றிற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் மீட்பிற்கு அதனைப்  பயன்படுத்துதல்.
  • ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
  • இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளால் கூட்டாக இணைந்து மேம்படுத்தப்பட்டுள்ள காலநிலை மற்றும் கடல் கண்காணிப்பு செயற்கைக் கோள்கள் பின்வருமாறு
    • மெகா – டிராபிக்ஸ் -  2011 ஆம் ஆண்டில்
    • சரல் - அல்டிகா - 2013 ஆம் ஆண்டில்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்