TNPSC Thervupettagam

கடல் கண்காணிப்பு – 21 (SPR Vigil)

January 18 , 2021 1335 days 430 0
  • இந்தியக் கடற்படையானது கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியின் 2வது பதிப்பைத் தொடங்கியுள்ளது.
  • இந்தப் பயிற்சியானது கடற்கரையோரப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புப் பிரிவில் இந்தியாவின் தயார் நிலையை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தியக் கடற்படையினால் நடத்தப்படும் இந்தப் பயிற்சியானது இந்தியாவின் கடற் பகுதியான 7516 கிலோ மீட்டர் முழுவதிலும் மற்றும் இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் நடத்தப்பட உள்ளது.
  • இது 13 கடற்கரையோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்க உள்ளது.
  • இந்தப் பயிற்சியின் தொடக்கப் பதிப்பானது 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்தது.
  • கடல் கண்காணிப்பு என்பது ”ட்ரோபேக்ஸ்” எனப்படும் கட்டுப்பாட்டு அளவிலான முக்கியப் பயிற்சியை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும்.
  • இந்தியக் கடற்படையானது ட்ரோபேக்ஸ் பயிற்சியை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகின்றது.
  • ட்ரோபேக்ஸ் என்பது வெப்ப மண்டல பிராந்திய அளவிலான தயார் நிலை மற்றும் செயல்பாட்டுப் பயிற்சி என்பதைக் குறிக்கின்றது.
  • இது இந்திய விமானப் படை, இந்திய இராணுவம் மற்றும் இந்தியக் கடற்படை ஆகிய படைகள் பங்கேற்கும் வகையிலான ஒரு படைகளுக்கு இடையிலான இராணுவப் பயிற்சியாகும்.
  • இந்தப் பயிற்சியானது இந்தியக் கடற்படை, இந்திய விமானப் படை, இந்திய காலாட் படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவற்றின் போர்க்காலத் தயார் நிலையைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகின்றது.
  • முதலாவது ட்ரோபேக்ஸ் பயிற்சியானது 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்