பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து, கடல் சார் இயக்கத்திற்கான ஒரு உள் வளிமண்டல இடைமறிப்பு ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டன.
எதிரிநாட்டு உந்துவிசை ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொண்டு வீழ்த்துவதே இந்தச் சோதனையின் நோக்கமாகும்.
இந்தச் சோதணையின் வெற்றியானது, கடல்சார் உந்துவிசை ஏவுகணைப் பாதுகாப்பு திறன் கொண்ட நாடுகளின் உயர்நிலைக் குழுவில் ஒன்றாக இந்திய நாட்டினைத் தரம் உயர்த்தியது.
இதற்கு முன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது எதிரிகளிடமிருந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை நடுநிலையாக்கும் ஒரு திறன் கொண்ட நிலம் சார்ந்த உந்து விசை ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பின் ஒரு செயல் விளக்கத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்தது.