கடல் சூழ்நிலை மண்டலம் - சவால்கள் மற்றும் வாய்ப்புகள் (MECOS)
January 6 , 2020 1665 days 704 0
கடல் சூழ்நிலை மண்டலம் - சவால்கள் மற்றும் வாய்ப்புகள் (Marine Ecosystems-Challenges and Opportunities - MECOS) அமைப்பின் மூன்றாவது சர்வதேச கருத்தரங்கமானது கொச்சியில் நடைபெற உள்ளது.
இந்தக் கருத்தரங்கத்தை இந்தியக் கடல் உயிரியல் சங்கம் நடத்துகின்றது.
இந்தக் கருத்தரங்கமானது ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goal - SDG) ஒன்றான SDG -14 மீது கவனம் செலுத்த உள்ளது.
“பெருங்கடல்களையும் அதன் வளங்களையும் நீடித்த வளர்ச்சிக்காகப் பாதுகாத்துப் பயன்படுத்துவதனை” SDG -14 வலியுறுத்துகின்றது.