TNPSC Thervupettagam

கடல் தளத்தில் நுண் நெகிழித் துண்டுகள்

October 12 , 2020 1510 days 718 0
  • சி.எஸ்.ஐ.ஆர்.ஓ (காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம்), என்ற ஒரு ஆஸ்திரேலிய அரசாங்க நிறுவனம் சமீபத்தில் உலகக் கடல் பரப்புத் தளமானது 14 மில்லியன் டன்களுக்கும் அதிகமான நுண் நெகிழித் துண்டுகளால் மாசுபடுத்தப் பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது.
  • ஆண்டுதோறும் கடல்களுக்குள் சென்று சேரும் குப்பைகளானது நிலைகுலைந்து உடைவதின் மூலம் இந்த நுண் நெகிழித் துண்டுகளானது கடல் தளத்தில் நுழைந்துள்ளது.
  • கடல் பரப்புத் தளத்தில் நுண் நெகிழித் துண்டுகளின் மீது ஆய்வு மேற்கொள்ளப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • நுண் நெகிழித் துண்டுகள் என்பது 5 மி.மீ அல்லது அதற்கும் குறைவான அளவுடைய சிறிய நெகிழித் துண்டுகள் ஆகும்.
  • இவை பெரும்பாலும் அளவில் பெரிய நெகிழிப் பொருட்கள் உடைபடுவதால் உருவாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்