ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (UNCTAD), 2024 ஆம் ஆண்டு கடல்சார் போக்குவரத்து மதிப்பாய்வு அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
2022 ஆம் ஆண்டில் பதிவான சரிவிற்குப் பிறகு மீளத் தொடங்கிய கடல் சார் வர்த்தகம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 2.4% வளர்ச்சியடைந்து 12,292 மில்லியன் டன்களை எட்டியது.
"2023 ஆம் ஆண்டில் வெறும் 0.3% மட்டுமே மிகவும் வளர்ச்சியடைந்த கொள்கலன் சார் வர்த்தகம் ஆனது, 2024 ஆம் ஆண்டில் 3.5% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் கொள்கலன் கப்பல் போக்குவரத்து வர்த்தகம் ஆனது சுமார் 8.2% அதிகரித்துள்ளது.
உலகளாவியக் கப்பல் போக்குவரத்து (டன்-மைல்கள்) செயல்பாடு ஆனது 2023 ஆம் ஆண்டில் 4.2% அதிகரித்ததோடு இது செலவினங்கள் மற்றும் உமிழ்வை அதிகரித்து உள்ளது.
சூயஸ் மற்றும் பனாமா கால்வாய் போன்ற முக்கிய கடல்சார் தடைகள் காணப்படும் பகுதிகள் தீர்க்கப்படாத இடையூறுகளை எதிர்கொண்டன.