“கடல் போக்குவரத்தின் மதிப்பாய்வு 2023” என்பது ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு அமைப்பினால் (UNCTAD) சமீபத்தில் வெளியிடப் பட்ட முதன்மை அறிக்கையாகும்.
கடல்சார் வர்த்தகம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 2.4 சதவீதமும் மற்றும் 2024 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 2 சதவீதத்திற்கு அதிகமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
உலகளாவிய மொத்த உமிழ்வில் 3% பங்கினைக் கொண்ட இந்தத் தொழில்துறையின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம், கடந்தப் பத்தாண்டுகளில் 20% அதிகரித்துள்ளது.
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனில், இந்த உமிழ்வுகள் 2050 ஆம் ஆண்டில், 2008 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 130% அளவை எட்டும்.
2023 ஆம் ஆண்டில் கடல்சார் போக்குவரத்துத் துறை 2.4% வளர்ச்சியடையும் என்று அறிக்கை கணித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் கொள்கலன் வழியான வர்த்தகம் 1.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு மேலும் இத்துறையின் வளர்ச்சி 2024 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 3% ஆக இருக்கும்.
முழு கார்பன் நீக்க இலக்கினை அடைவதற்கு 2050 ஆம் ஆண்டிற்குள் 8 பில்லியன் டாலர் முதல் 28 பில்லியன் டாலர் வரையிலான வருடாந்திர முதலீடுகள் தேவைப்படும்.
முழுவதும் கார்பன் நடுநிலைத் தன்மை கொண்ட எரிபொருளுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை நிறுவ சுமார் 28 பில்லியன் டாலர் முதல் 90 பில்லியன் டாலர் வரையிலான வருடாந்திர முதலீடுகள் தேவைப்படலாம்.