அண்ணா பல்கலைக் கழகத்தின் புவியியல் துறையினால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி சென்னைக் கடற்கரையிலுள்ள 1.5 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பானது 2100 ஆம் ஆண்டில் மூழ்கிவிடும் என்று கணித்துள்ளது.
கடல் மட்ட உயர்வு காரணமாக கடல் பரப்பானது ஒவ்வொரு ஆண்டும் 0.5 மீட்டர் அளவுக்கு நிலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்.
கடந்த 50 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் 3.6 மி.மீ. கடல் மட்ட உயர்வானது வங்காள விரிகுடாவில் நிகழ்ந்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கடல் மட்ட அதிகரிப்பானது இதர ஆசியப் பிராந்தியங்களில் ஏற்பட்டதை விட அதிகமாகும்.
கடல் மட்ட உயர்வானது கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தை மேல் மட்டத்திற்குக் கொண்டு வரும்.
நிலத்தடி நீரில் உள்ள நன்னீரில் கடல் நீரானது கலந்து விடும்.