TNPSC Thervupettagam

கடல் வழி விமானச் சேவை – கேரளா

November 15 , 2024 10 days 101 0
  • கேரள மாநில அரசானது விமான நிலையங்களுடன் பல்வேறு இடங்களை இணைக்கச் செய்வதற்காக கடல் வழி விமானசஜ் சேவையை தொடங்கியுள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நீர்நிலைகளைச் சுற்றி நீர்நிலை விமான நிலையங்கள் அமைக்கப்படலாம்.
  • கடல் வழி விமானச் சேவையானது, பிராந்திய விமானச் சேவை இணைப்பு (RCS)-UDAN திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
  • இது கேரளாவின் நான்கு விமான நிலையங்கள் மற்றும் உப்பங்கழிகள் வழியாக ஒரு மானியக் கட்டணத்துடன் விமானச் சேவை இணைப்பை நன்கு மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் ஒரு சோதனை ஓட்டம் கொச்சி ஏரியில் உள்ள போல்காட்டி நீர் நிலையத்தில் இருந்து மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி அணைக்கு மேற்கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்