TNPSC Thervupettagam

கடல் வானூர்தித் திட்டம் – முதலாவது சேவை

October 24 , 2020 1403 days 641 0
  • குஜராத்தின் ஐந்து கடல் வானூர்திச் சேவைகளில் முதலாவது சேவையானது அக்டோபர் 31 அன்று தொடங்கி வைக்கப் படவுள்ளது.
  • இது அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதியை நர்மதை மாவட்டத்தின் கெவடியாவில் உள்ள ஒற்றுமைக்கான சிலையுடன் இணைக்கும்
  • ஒரு கடல் வானூர்தியானது நீரில் மேலெழும்பி, கீழே இறங்குவதற்கான வசதி பொருத்தப்பட்ட இறக்கை கொண்ட ஒரு வானூர்தி அமைப்பைக் கொண்டுள்ளது.
  • இது தனது படகின் பயன்பாட்டின் மூலம் விமானப் பயணத்தைப் பொது மக்களுக்கு வழங்குகின்றது.
  • கடல் வானூர்திகளின் 2 முக்கியமான வகைகள் : பறக்கும் படகுகள் (கப்பல் அமைப்பு வானூர்தி) மற்றும் மிதக்கும் வானூர்திகள் ஆகியவையாகும்.
  • இது பெரும்பாலும் இறக்கை அல்லது முனை மிதவைகள் எனப்படும் இறக்கை முனைகளுக்கு அருகில் சிறிய மிதவைகளுடன் பொருத்தப் பட்டுள்ளது.
  • பறக்கும் படகின் கப்பல் அமைப்பானது கடற்பயண வீரர்கள், பயணிகள் மற்றும் சரக்குகளுக்கு இடமளிக்கும்.
  • இது கப்பல் அல்லது படகு ஆகியவற்றின் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்