கடல் வெப்ப அலைகள் (MHWs) ஆனது கடல் நீரின் அசாதாரண வெப்பமயமாதல் நிகழ்வுகளைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில், புவி வெப்பமடைதல் கடல் வெப்ப அலைகளை அடிக்கடி ஏற்படக் கூடியதாகவும், தீவிரமானதாகவும் ஆக்கியுள்ளது.
MHW அலைகள் ஆனது, பொதுவாக கடல் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையைக் கண்காணிப்பதன் மூலம் அளவிடப்படுகின்றன.
பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளில் உள்ள MHW அலைகள், "குறிப்பிடத்தக்க வகையில் பதிவு செய்யபடாதவையாக" இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நன்கு கண்டறிந்துள்ளனர்.
சுழல் நீரோட்டங்களின் பெரிய சுழல்கள், சில நேரங்களில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பகுதிகளில் 1,000 மீட்டருக்கு மேலான ஆழம் வரை அடையும்.